கிரிக்கெட் வீரர் : ”சூர்யாவின் ரசிகன் நான்”


பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பெயர் தொடர்ச்சியாக சில நாட்கள் சமூக ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியில் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்த வீரர் சுரேஷ் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காகவும் தனது பெரும் பங்களிப்பை அவர் கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் யுவராஜ் சிங் இவருக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியில் மிகுந்த ஆதரவு தெரிவித்தார் என்று சர்ச்சையை கிளப்பினார். மேலும் சமீபத்தில் இந்த ஊரடங்கில் பிரபலங்கள் சமையல்கட்டு பக்கம் ஒதுங்க, மலையாள நடிகரான துல்கர் சமைத்த உணவுக்கு ரெஸிபி கேட்டிருந்தார் ரெய்னா. இப்பொழுது தென்னிந்திய நடிகர்களில் தனக்கு நடிகர் சூர்யாவின் நடிப்பு மிகவும் பிடிக்கும் என்றும், சூர்யாவும் ஜோதிகாவும் சேர்ந்து நடித்த “நீயூயார்க் நகரம்” என்ற படப்பாடலை தான் மிகவும் ரசித்து கேட்பேன் என்றும் கூறியுள்ளார்.

Actor SuriyaSureshrainaSurya
Comments (0)
Add Comment