‘தல’ சொல்லிட்டார்னா நடிக்கத் தயார்… : சூர்யா க்ரீன் சிக்னல்!

சென்ற வெள்ளிக்கிழமை ரிலீசான சூர்யாவின் ’24’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.

2000-க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீசாகியிருப்பதால் ரிலீசான ரெண்டே நாளில் உலகம் முழுவதும் சுமார் 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

படம் ரிலீசான கையோடு தனது குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்கு ஜாலி டூர் சென்ற சூர்யா அங்குள்ள தியேட்டர் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் ’24’ படத்தை பார்த்து ரசித்திருக்கிறார்.

அப்போது ரசிகர்களுடன் நேரடியாக உரையாடிய போது அஜித்துடன் இணைந்து நடிப்பீர்களா? என்கிற கேள்விக்கு பதிலளித்த சூர்யா ‘தல சொல்லிட்டார்னா பண்ணிடலாம்’ என்று க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

அவரின் இந்தப் பேச்சு அஜித் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

2424 MovieajithSuriyaஅஜித்சூர்யா
Comments (0)
Add Comment