அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் சூர்யா! : அப்செட்டான முத்தையா

சூர்யாவை வைத்து ஒரு இயக்குநர் படம் இயக்குகிறார் என்றால் அது அந்தப்படம் ரிலீசானால் தான் உறுதியாகும் போலிருக்கிறது.

கடைசி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று சொல்வது போல சூர்யா பட இயக்குநர்களின் லிஸ்ட்டில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.

அப்படித்தான் கபாலி முடித்த கையோடு ரஞ்சித்துடன் இணையவிருந்த சூர்யா கருத்து வேறுபாடு காரணமாக ரஞ்சித் படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

இதற்கிடையே எஸ் 3 படத்தை முடித்த கையோடு கொம்பன் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது.

அவருடைய இயக்கத்திலும் திடீரென்று எண்ட்ரி கொடுத்து கட்டையைப் போட்டார் இயக்குநர் விக்னேஷ் சிவன். எஸ் 3 படத்தை முடித்த கையோடு விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கப் போவதாக சூர்யா அறிவித்ததால் முத்தையாவின் நிலை என்னவானது என்பதே தெரியாமல் இருந்தது.

ஒருவேளை விக்னேஷ் சிவன் படத்தை முடித்த பிறகு சூர்யா முத்தையா இயக்கத்தில் நடிப்பார் என்று பார்த்தால் இப்போது அதிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆமாம், விக்னேஷ் சிவன் படத்தை முடித்த கையோடு ஜோக்கர் படக்கம்பெனியான ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம் சூர்யா.

சரி அப்போ முத்தையா இயக்கத்தில் சூர்யா நடிப்பது எப்போது?

அதை சூர்யாவே சொன்னால் தான் உண்டு!

Director MuthaiahS3Singam-3Suriya
Comments (0)
Add Comment