”அண்ணியும், நீங்களும் மறுபடியும் எப்போ சேர்ந்து நடிக்கப் போறீங்க..?”
‘அஞ்சான்’ பட ரிலீசின் போதே சூர்யாவிடம் இந்தக் கேள்வியை கேட்டு விட்டார்கள் அவரது பாசமிகு ரசிகர்கள்!
அதன்பிறகு சொந்தமான ’36 வயதினிலே’ படத்தை தயாரித்து ஜோதிகாவுக்கு பிரம்மாண்டமான ரீ-எண்ட்ரி கொடுத்த சூர்யா அதில் ஒரு சீனில் கூட தலை காட்டவில்லை.
இருந்தாலும் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய மாட்டார்களா? என்கிற எதிர்பார்ப்பு மட்டும் அவரது ரசிகர்கள் மனசுக்குள் இருந்து கொண்டே வந்தது.
இப்போது அதற்கான சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது என்கிறார்கள் கோலிவுட்டில்.
ஆமாம், தற்போது ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்3’ படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.
அந்தப்படம் முடியவும் அடுத்து நடிக்கப் போகும் படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகாவும் நடிக்கலாம் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில் எஸ்3 ரிலீசானவுடன் இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகும்.
அதுவரை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சூர்யா ஃபேன்ஸ்