சுசீந்திரனின் இயக்கத்தில் அவரது பத்தாவது படமாக சென்ற வெள்ளியன்று ரிலீசான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்.’
சந்தீப் கிஷன் ஹீரோவாக நடித்திருந்த இந்தப் படத்தில், தமிழில் அறிமுக நாயகியாக மெஹ்ரின் நடித்தார். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படத்துக்கு விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
அதோடு படத்தில் எந்தெந்த காட்சிகள் தேவையில்லாதது போன்ற விஷயங்களையும் அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். அந்தக் கருத்துகளை எல்லாம் காதில் வாங்கிய சுசீந்திரன் சில தினங்களுக்கு முன்பு படத்தில் ஹீரோயின் சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளோடு சுமார் 20 நிமிடக் காட்சிகளை நீக்கி எடிட்டட் வெர்ஷனாக ரிலீசாகும் என்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று சுசீந்திரன் , அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீஸானது. சில தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தப் படத்தை ரீ-ரிலீஸ் பண்ண ப்ளான் பண்றோம். அடுத்த மாதம் 15-ம் தேதி ரீலிஸாகும். அதனால், நாளையிலிருந்து எந்தத் திரையரங்குகளிலும் இந்தப்படம் ஓடாது’’ என்று தெரிவித்துள்ளார்.