அஜித்தை அரசியலுக்கு கூப்பிட்ட டைரக்டர் – ‘வேண்டாம் சாமி’ என்று கும்பிடு ரசிகர்கள்

நாடாளுமன்ற தேர்தல் திருவிழா சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் அஜித்தைப் பற்றி வெளியிட்ட ஒரு கடிதம் தமிழகத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நேற்று முன் தினம் டைரக்டர் சுசீந்திரன் அஜித்துக்கு கடிதம் எழுதுவது போல் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ”40 ஆண்டு கால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.., உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

சுசீந்திரனின் இந்த கடிதத்தைப் பார்த்த அஜித் ரசிகர்களில் சிலர் சுசீந்திரனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்கள். ஆனால் பெரும்பாலானோர் ”எங்களுக்கு அஜித் போதும், அரசியல் வேண்டாம்” என்று அஜித்துக்கு அரசியலே வேண்டாம் என்கிற அர்த்தத்தில் கருத்து தெரிவித்தனர்.

ரஜினி, கமல், விஜய் ரசிகர்கள் எல்லோரும் தங்கள் அபிமான ஹீரோ அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆதரவு தெரிவித்த நிலையில், அஜித் ரசிகர்கள் எங்களுக்கு அரசியல் வேண்டாம், அஜித்தே போதும் என்று அரசியலை தவிர்த்திருப்பது பலராலும் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டு வருகிறது.

தலைவன் எவ்வழி! தொண்டன் அவ்வழி!!

ajithAjith FansMovie NewsSuseenthiranTN Political
Comments (0)
Add Comment