சுசீந்திரனின் ‘சாம்பியன்’ படத்தின் டப்பிங் பணிகள் துவக்கம்!

யக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஜீனியஸ்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதை தொடர்ந்து அவர் இயக்கியுள்ள ‘சாம்பியன்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விளையாட்டை மையமாக வைத்து வந்த ‘வெண்ணிலா கபடி குழு’ , ‘ஜீவா’ போன்ற வெற்றிப் படங்களை இவர் இயக்கியுள்ளார். அந்த வரிசையில் தற்போது உருவாகி வரும் ‘சாம்பியன்’ படம் புட்பாலை மையமாக கொண்டது.

இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி , அஞ்சாதே நரேன், ஜெயப்ரகாஷ், ஆர்.கே சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்துக்கு இசை அரோல் குரொலி, ஒளிப்பதிவு சுஜித் சாரங், களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே. ராகவி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் டிசம்பர் 2018 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதற்கிடையே சுசீந்திரன் இயக்கியுள்ள ‘ஏஞ்சலினா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ChampionSuseenthiran
Comments (0)
Add Comment