நாசர் நல்ல மனசுக்காரர் ; ஆனால் விஷால்? : டி.ஆர் காட்டம்

டிகர் சங்கத்தை விட்டு விலகப்போவதாக சிம்பு அறிவித்தது கோடம்பாக்கத்தில் பெரிய அதிர்வலையை ஒன்றும் ஏற்படுத்தவில்லை.

காரணம், அவரை வைத்து படமெடுத்து சந்தோஷப்பட்ட தயாரிப்பாளர்களை விட, இன்றைக்கும் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் தான் அதிகம்!

அதனால் தானோ என்னவோ ‘போடா போடி’ படத்துக்குப் பிறகு சிம்புவை வைத்து படமெடுக்க ஒரு தயாரிப்பாளரும் முன் வராததால் சொந்த காசைப் போட்டு ‘இது நம்ம ஆளு’ படத்தை தயாரித்தார் சிம்பு.

அதுவும் எப்போது ரிலீஸ் என்கிற நிலவரம் தெரியாத நிலையில் ”நடிகர் சங்கத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாததால் அதிலிருந்து விலகப்போகிறேன்” என்று அறிவித்த சிம்புவை அவருடைய அப்பாவும் நடிகருமான டி.ராஜேந்தர் அறிக்கை மூலம் சமாதானப்படுத்த நினைத்திருக்கிறார்.

வீட்டில் இருக்கும் மகனிடம் அரை மணி நேரம் பேசினாலே போதும். பிரச்சனை தீர்ந்தது. ஆனால் என்றைக்குமே தனது சொந்த பிரஸ்மீட்டுக்கே அப்பா டி.ஆரை காக்க வைத்தே பழக்கப்பட்டவர் என்பதால் இதிலும் அப்படி காக்க விருப்பமில்லாத டி.ஆர். தன்  வீட்டிலிருக்கும் மகனுக்கே அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார் டி.ஆர்.

அதில் ஒரு பக்கம் நாசரை நல்லவர் என்று சொல்லியிருக்கும் டி.ஆர். இன்னொரு பக்கம் விஷால் செய்வது நியாயமா? என்கிற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.

இதோ நமக்கு வந்த அந்த அறிக்கையின் நகல் :

 

 

Nadigar SangamSimbuT.Rvishalசிம்புடி.ஆர்நடிகர் சங்கம்விஷால்
Comments (0)
Add Comment