சிம்புவால் கோடிக்கணக்கில் கடன்? : மீண்டும் நடிப்பில் பிஸியானார் டி.ஆர்

ப்போதெல்லாம் சிம்பு நடித்த படங்கள் ரிலீஸ் சர்ச்சையில் சிக்குகிறதோ? அப்போதெல்லாம் அவருக்காக கோடிக்கணக்கில் சொந்தப் பணத்தை போட்டு ரிலீஸ் செய்து பிரச்சனையை முடித்து வைப்பார் அப்பா டி.ஆர்.

அந்த வகையில் சிம்புவின் சினிமா கேரியரில் ‘வாலு’வும், ‘இது நம்ம ஆளு’ திரைப்படமும் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை அடுத்தடுத்து ரிலீஸ் சிக்கலை சந்தித்தது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும்.

சரி சர்ச்சைகளிலிருந்து மீண்டு ரிலீசான படங்களாவது லாபத்தை சம்பாதித்துக் கொடுத்ததா? என்றால் அதுவும் இல்லை. போட்ட காசு வந்தாலே பெரிய விஷயம் என்கிற ரேஞ்சில் தான் வசூல் நிலவரம் இருந்தது.

இப்படி சிம்புவுக்காக கடைசியாக ரிலீசான இரண்டு படங்களிலும் கணிசமாக கோடிகளை இழந்த டி.ஆர். அதை ஈடுகட்டும் நோக்கில் இப்போது புது முடிவை எடுத்திருக்கிறார்.

ஆமாம், இதுவரை  திரைப்படங்களில் அதிகமாக தலை காட்டாமல் இருந்த டி.ஆர் இனி புதிய படங்களில் தொடர்ந்து நடித்து சிம்புவால் ஏற்பட்டிருக்கும் கடனை அடைக்க முடிவுசெய்திருக்கிறாராம்.

தற்போது விஜய்சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் டி.ஆர் புதிதாக  தேடி வரும்  எந்த பட வாய்ப்புகளையும் மறுப்பு சொல்லாமல் கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

Idhu Namma AaluSimbuT Rajendarஇது நம்ம ஆளுசிம்புடி.ராஜேந்தர்
Comments (0)
Add Comment