பிரபுதேவாவுக்கு ஜோடியா..? : பயந்து நடுங்கும் தமன்னா!

‘பாகுபலி’யில் உயிர்ப்புள்ள நடிப்பை வெளிக்காட்டிய பிறகும் கூட கொஞ்ச நாள் முன்புவரை தமன்னாவுக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

இதனால் அப்செட்டில் இருந்தவருக்கு பிரபுதேவாவிடமிருந்து அழைப்பு வந்ததும் ஹேப்பியானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் படத்தில் முதன்முறையாக பிரபுதேவாவுடன் ஜோடி சேர்கிறார் தமன்னா.

அந்த மகிழ்ச்சி ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பிரபுதேவாவின் டான்ஸ் மூவ்மெண்ட்டுகளை நினைத்தாலே உதறல் எடுக்கிறதாம் தமன்னாவுக்கு.

பிரபுஜீயுடன் நடிப்பதில் சந்தோஷம் தான். ஆனால் பாடல் காட்சிகளில் அவருடைய நடன வேகத்துக்கு என்னால் ஈடு கொடுக்க முடியுமா? என்பதை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது என்கிறார்.

ஹாரர் பிளஸ் காமெடிப்படமாக தயாராகும் இந்தப் படத்தை தனது பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவாவே தயாரிக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்குகிறார்.

Prabhu DevaTamannaதமன்னாபிரபுதேவா
Comments (0)
Add Comment