தமிழ்சினிமாவில் ஷுட்டிங் எப்போது?

movie

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையா விட்டாலும் தளர்வுகளைப் படிப்படியாக அறிவித்து வருகிறது. பொதுப் போக்குவரத்துத் தவிர ஓரளவு எல்லாத்துறைகளையும் இயங்க வைத்துள்ளது அரசு. அந்த வகையில் சினிமாத்துறை எப்போது இயங்கும் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. நேற்று இது சம்பந்தமாக அமைச்சர் கடம்பூர் ராஜுவை தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்கள் சந்தித்தனர்.

முக்கியமாக சின்னத்திரை தொடர்கள் மற்றும் படங்களின் ஷுட்டிங்கை நடத்த அனுமதி கோரியுள்ளனர். இது குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுப்பதாக அமைச்சர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதனால் ஷுட்டிங் விரைவில் இருக்கும் என நம்பலாம்

tamilmovie
Comments (0)
Add Comment