தியேட்டர்களில் சிசிடிவி கேமரா கட்டாயம்! – தமிழ் ராக்கர்ஸுக்கு செக் வைத்த விஷால்!

மிழ்சினிமாவின் வளர்ச்சிக்கு ஆன்லைன் பைரசி பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

படம் வெளியான அன்றே இணையதளங்களிலும் வெளியாவதால் தியேட்டர்களில் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் குமுறுகிறார்கள். அதோடு இந்த ஆன்லைன் பைரசிக்கு சில தியேட்டர்களும் உடந்தையாக இருந்தது ஆதாரப்பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது இந்தப் பிரச்சனைக்கு முடிவு கட்டும் விதமாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இணைந்து கலந்தாய்வு கூட்டம் ஒன்றை நேற்று நடத்தினர்.

அதில் முக்கியமாக திருட்டு வீடியோ பைரசியை ஒழிக்க கீழ்க்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்குள் பொருத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. பொருத்தப்பட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி பதிவு செய்யபடும்.

4. வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தபடுவர்.

6. ஒவ்வொரு முறை திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.

7. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்

8. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கப்படும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Producer Counciltn theatresvishal
Comments (0)
Add Comment