பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’!

‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார்.

Actor Sameer Ali KhanTamil Paiyan Hindi Ponnu movie