இறுதிகட்ட படப்பிடிப்பில் விஜய் ஆண்டனியின் ‘தமிழரசன்’

விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் நடித்து வரும் படம் ‘தமிழரசன்’.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் சுரேஷ்கோபி, ராதாரவி, சோனு சூட், யோகிபாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

இவர்களுடம் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ்வும் நடிக்கிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் பாபு யோகேஸ்வரன். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடைபெற்று படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது இன்னும் சில நாட்களில் மூன்றாக் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கி நிறைவடைய உள்ளது.

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இந்த ‘தமிழரசன்’ படம் தயாராகி வருகிறது.

Movie NewsRamya NambeesanTamizharasanVijay Antonty
Comments (0)
Add Comment