திருமணத்திற்குப் பிறகு ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் ‘டெடி’

‘கஜினிகாந்த்’ படத்தில் சேர்ந்து நடித்த போது காதலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஆர்யா ஹீரோவாகவும், சாயிஷா ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.

ஆர்யாவுக்கு பொருத்தமான புதியவகை ஆக்‌ஷன் திரில்லர் கதையோடு தயாராகி இருக்கிறார் இயக்குநர் சக்தி சவுந்தரராஜன். இவர் ஏற்கெனவே ‘நாணயம்’, ‘மிருதன்’, ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘டிக் டிக் டிக்’ ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வைத்திருக்கும் இயக்குநர். இந்த ‘டெடி’ படமும் அவரது டெடி கேஷனில் அசுரப்பாய்ச்சல் பாய இருக்கிறது

இன்று சென்னையில் பூஜையுடன் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெற இருக்கிறது.

ஆர்யா சாயிஷா திருமணத்திற்குப் பின் ஒன்றாக நடிக்க வந்திருப்பது ரசிகர்களிடையே இப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களோடு காமெடிக்கு சதீஷ், கருணாகரன் ஆகியோரும் இணைகிறார்கள்.

AryaMovie NewsSayyeshaaTeddy
Comments (0)
Add Comment