விரைவில் ‘தடம்’ பதிக்க வரும் அருண் விஜய்

ருண் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘குற்றம் 23’ படத்தை தொடர்ந்து ரெதான் – தி சினிமா பீப்பள் சார்பாக இந்தர்குமார் தயாரித்து வரும் படம் ‘தடம்’.

மகிழ்திருமேனி இயக்கியிருக்கும் இப்படத்தில் நாயகனாக அருண் விஜய் நடித்துள்ளார். ஏற்கனவே இந்தக் கூட்டணி தடையறத் தாக்க என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த கூட்டணி. மீண்டும் இப்படத்தில் இணைந்திருக்கிறது.

அருண் விஜய் தவிர இப்படத்தில் தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், ஜார்ஜ், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படம் தணிக்கை குழுவினருக்கு காண்பிக்கப்பட்டபோது படத்தைப் பார்த்து பாராட்டியவர்கள் படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.

ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் படத்தில் இசை மற்றும் பட ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arun VijayMagizh ThirumeniSmruthiTanya HopeThadamThadam Movie News
Comments (0)
Add Comment