‘தல 58’ : அஜித்துக்காக அடித்துக் கொள்ளும் பிரம்மாண்ட இயக்குநர்கள்!

ல்கேரியாவுக்கு தனது படை பரிவாரங்களுடன் சென்று விட்டார் நடிகர் அஜித்.

சுமார் 45 நாட்கள் அங்கு நடந்து படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்தப்படமே இன்னும் கால்வாசி தாண்டாத நிலையில் இப்போதே அஜித்தின் அடுத்த படம் குறித்தான தகவல்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

அஜித்தின் அடுத்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இன்னொரு பிரமாண்ட இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் அஜித்தின் 58-வது படத்தை இயக்கப் போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

விஜயா கம்பைன்ஸ் தயாரிக்க இருக்கும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் – ஏ.ஆர்.முருகதாஸ் நடிப்பில் ரிலீசான தீனா படத்தின் வெற்றிக்குப் பிறகு அதே கூட்டணி மீண்டும் எந்தப் படத்திலும் இணையவில்லை.

பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இந்தக் கூட்டணி பற்றி பேச்சு அடிபடுவது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருக்கிறது.

A.R.MurugadossajithAjithkumarShankarThala 58
Comments (0)
Add Comment