‘தளபதி 63’ படத்துக்கு புதிய சிக்கல்!

‘சர்கார்’ படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்துக்கு தற்காலிகமாக ‘தளபதி 63’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது விஜய் ரசிகர்களாலேயே திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காசிமேடு உள்ளிட்ட சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பில் விஜய்யைப் பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் பெருமளவு கூடுவதால் தினமும் திட்டமிட்டபடி அன்றைய காட்சிகளை படமாக்க முடியவில்லை. எனவே, பல தினங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் பட ரிலீசும் தள்ளிப் போகும் என்பதால் இனி படப்பிடிப்பை பொதுவெளியில் நடத்தப்படாமல், அரங்கிற்குள்ளேயே நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இதற்காக பின்னி மில்ஸ், ஈவிபி மற்றும் ஆதித்யராம் ஸ்டூடியோஸ் ஆகியவற்றில் பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு மீண்டும் படப்பிடிப்பை துவங்க ‘தளபதி 63’ படக்குழு முடிவு செய்துள்ளது.

முன்னதாக ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என இயக்குனர் அட்லீ சொன்ன போது, சென்னையில் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே தமிழ்ப்பட கலைஞர்களுக்கு வேலை கிடைக்கும் என விஜய் கேட்டுக்கொண்டார். அதனாலேயே சென்னையைச் சுற்றி படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

AtleeMovie NewsThalapathy 63vijayVijay 63
Comments (0)
Add Comment