‘தளபதி 63’ படத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் விஜய்!

‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து தற்போது அட்லி இயக்கத்தில் ‘தளபதி 63’ படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, வில்லனாக பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்க இவர்களுடன் விவேக் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு சென்னையைச் சுற்றி பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விளையாட்டு சம்பந்தமான கதைக்களம் கொண்ட இப்படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்தி வெளியானது. தற்போது படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் கால்பந்த்துடன் தொடர்புடைய ஒரு முக்கியமான கேரக்டர் ஒன்று உண்டாம். அந்த கேரக்டரில் யாரை நடிக்க வைப்பது என்று அட்லீ யோசித்த நிலையில், அதிலும் நானே நடித்து விடுகிறேனே? என்று அட்லீயிடம் கோரிக்கை வைத்திருக்கிறாராம் விஜய்.

மாஸ் ஹீரோ இரு வேடங்களில் நடித்தால் படத்துக்கு அது கூடுதல் பலம் தான் என்பதால் அனேகமாக அட்லீ விஜய்யின் விருப்பத்துக்கு செவி சாய்ப்பார் என்றே தெரிகிறது.

ஒருவேளை அட்லீ ஓ.கே சொல்லி விட்டால் விஜய் ரசிகர்களுக்கு ‘தளபதி 63’ படம் டபுள் ட்ரீ தான்.

AtleeMovie NewsThalapathy 63vijay
Comments (0)
Add Comment