‘தப்பாட்டம்’ ஆட வரும் ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர்!

ப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இது குறித்து பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள அன்பையும், காதலையும் சொல்வதோடு, செய்யாத தவறுக்கு பலி ஆடாக சிக்கிக் கொள்ளும் நாயகியின்

வாழ்க்கை என்ன ஆனது என்பதை இப்படத்தில் யதார்த்தமாக சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

இப்படத்திற்கு இசை – பழநிபாலு, ஒளிப்பதிவு – ராஜன், பாடலாசிரியர் – விக்டர் தாஸ், கார்த்திக் & பாலு, சண்டைப்பயிற்சி – ஆக்சன் பிரகாஷ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – முஜிபூர், ரஹ்மான், தயாரிப்பு – ஆதம் பாவா

விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

cinema newsThappattamThappattam News
Comments (0)
Add Comment