”என் முகம் எனக்கே போரடித்து விட்டது” – சித்தார்த் ஓப்பன் டாக்

தி நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் ஆக்‌ஷன் படம் ‘தி லயன் கிங்’.

வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்தப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம்.

‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசியதாவது.

‘தி லயன் கிங்’ குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரண ஒரு கதையை மிகச்சிறப்பாக சொல்லும் போது அது மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. அந்த வகையில் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம், தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச்சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.

‘தி லயன் கிங்’ கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு பெரிய திரையில் மிக பிரமாண்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ‘ஜங்கிள் புக்’ படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்த படத்தில் சாதித்து காட்டியிருக்கிறார்கள்.
டப்பிங்கில் எப்போதுமே நாம் தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் டப்பிங் பேசுவதை பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும். ஜூலை 19ஆம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்றார் நடிகர் சித்தார்த்.

Arvind SwamyMovie NewssiddharthThe Lion King
Comments (0)
Add Comment