அஜித் படத்தால் நஷ்டப்பட்ட சிவாஜி குடும்பம்? : ஈடுகட்ட முன் வந்த விஜய்!

ஜினியின் ‘சந்திரமுகி’ கொடுத்த வசூல் தெம்பில் அடுத்ததாக அஜித்தை வைத்து ‘அசல்’ படத்தை எடுத்தது நடிகர் திலகத்தின் குடும்ப தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்.

அந்தப்படமோ ‘சந்திரமுகி’யில் சம்பாதித்ததை மொத்தமாக விடக்கூடிய அளவுக்கு கையைச் சுட, சிவாஜி புரொடக்‌ஷனுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்து விட்டது.

அதன்பிறகு சில வருடங்கள் படத்தயாரிப்பில் இருந்து விலகியிருந்தது சிவாஜி புரொடக்‌ஷன்ஸ்.

தற்போது மீண்டும் படத்தயாரிப்பில் குதித்த திட்டமிட்டு வருகிறதாம் சிவாஜி புரொடக்‌ஷன்ஸ். எல்லாம் விஜய்யின் ‘தெறி’யின் வசூல் தந்த தெம்பு தானாம்.

இதுவரை இல்லாத அளவுக்கு விஜய்யின் ‘தெறி’ படம் வசூலை வாரிக்குவித்து வருவதால் மார்க்கெட் ஏறியிருக்கும் விஜய்யை வைத்து ஒரு படத்தை தயாரிக்கலாமே? என்று யோசித்திருக்கிறார் நடிகர் பிரபு.

தனது விருப்பத்தை விஜய்யிடம் சொல்ல அவரும் ”அது என்னுடைய பாக்கியம்” என்று க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டாராம்.

பரதன் இயக்கத்தில் 60-வது படத்தில் நடித்து வரும் விஜய் 61-வது படமாக சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

அட்லி இயக்குவதாக சொல்லப்படும் இந்தப்படம் அனேகமாக ‘தெறி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்கிறார்கள்.

எதுவா இருந்தாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்!

ajithAjithkumarIlayathapathySivaji ProductionsThalaTheriTheri 2vijayஅஜித்அஜித்குமார்இளைய தளபதிதலதெறிதெறி 2விஜய்
Comments (0)
Add Comment