திடீரெனப் பரவிய ‘தெறி’ வதந்தி : ரிலீஸ் நேரத்து நெருக்கடியா?

 

மாங்க…. சமீபகாலமாக விஜய் நடிப்பில் வெளியாகும் எல்லாப் படங்களுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் அரசியல் சாயத்தை கிலோ கணக்கில் பூசிவிட்டு ரிலீஸ் நேரத்தில் ஏதாவது நெருக்கடி கொடுக்கும் வேலையை சில ஆசாமிகள் சைலண்ட்டாகச் செய்து வருகின்றனர்.

‘புலி’ படத்தில் கூட ரிலீஸ் நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் பெரும் சோதனையை கொடுத்தார்கள்.

இப்போது விஜய்யின் அடுத்த படமான ‘தெறி’ படப்பிடிப்பும் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் யாரோ சிலர் இப்படத்தின் ஆடியோ பங்ஷன் பற்றிய ஒரு செய்தியை சமூக வலைத் தளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.

அதாவது ”’தெறி’ படத்தின் ஆடியோ பங்ஷன் அடுத்த மாதம் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெறுகிறது” என்பது தான் அந்த தகவல்.

இந்திய ஜனநாயக கட்சித் தலைவரான பச்சைமுத்துவுக்கு சொந்தமான கல்லூரி என்பதால் விஜய் அவரோடு நெருக்கமாகி விட்டாரோ? என்கிற சந்தேகம் அந்த செய்தியை படிக்கிற எல்லோருக்கும் கண்டிப்பாக வரும் என்பதால் வந்தது செய்தியல்ல, அது வெறும் வதந்தி என்று மறுத்திருக்கிறா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

”ஆடியோ பங்ஷனை எங்கு நடத்துவது? எப்படி நடத்துவது? என்று நாங்கள் இன்னும் திட்டமிடவில்லை. அதற்கு முன்பாகவே அது எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடக்கப்போகிறது என்று யாரோ தவறாக தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

விரைவில் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நடைபெறும் இடம் குறித்து அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிக்கப்படும். அதுவரை ‘தெறி’ ஆடியோ பங்ஷன் குறித்து எந்த செய்தி வந்தாலும் யாரும் நம்ப வேண்டாம்” என்றுகூறியிருக்கிறார்.

ஏற்கனவே அரசியல் சாயம் பூசப்பட்ட ‘தலைவா’ ரிலீஸ் நேரத்தில் பட்டபாடு எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படி இருக்கையில் படம் ஆரம்பித்தலிருந்து இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்த ‘தெறி’யைப் பற்றி  திடீரென்று வதந்தி பரவியதால் அதை மறுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு.

TheriTheri Audio LaunchvijayVijay59தெறிதெறி ஆடியோ ரிலீஸ்விஜய்விஜய்59
Comments (0)
Add Comment