கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம் !

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.

அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படமாக உருவாகும் “தி வெர்டிக்ட்” கோர்ட்ரூம் டிராமா, திரில்லராக உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திரு. பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும் டெக்சாஸில் வசிப்பவர்கள். இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படமாகும். மேலும் ஒரு சுவாரஸ்யமாக, இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது.

நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் & பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கோலிவுட்டின் வசீகர ஜோடியான திருமதி சினேகா & திரு. பிரசன்னா ஆகியோர் தற்போது சமூக ஊடகங்களில் டிரெண்டிங்கில் இருந்து வரும் “தி வெர்டிக்ட்” படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

Actress 𝑽𝒂𝒓𝒂𝒍𝒂𝒙𝒎𝒊 𝑺𝒂𝒓𝒂𝒕𝒉𝒌𝒖𝒎𝒂𝒓director KrishnaSankarSuhasini Maniratnamtheverdict movie