கருணாநிதியின் ஃபேமிலியிலிருந்து இன்னொரு கலை வாரிசு தமிழ்சினிமாவுக்குள் வந்திருக்கிறார்.
பெயர் ரக்ஷன், இவர் மு.க.ஸ்டாலினின் மைத்துனர் டாக்டர் ராஜமூர்த்தியின் மகனாம்.
அவர் நடிக்கும் ‘திருட்டு ரயில்’ என்ற படத்தை எஸ்எஸ்எஸ் மூவீஸ் சார்பில் எ.எஸ்.டி. சலீம் மற்றும் அனு மூவீஸ் பி.ரவிக்குமார் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் ரக்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் விஜயவாடாவைச் சேர்ந்த கேத்தி.
முதல்ல ரக்ஷன் கருணாநிதி ஃபேமிலின்னு தெரியாது, அது தெரியாமத்தான் கதைக்கு செட்டானதுனால கமிட் பண்ணினேன் என்று சொல்லும் இயக்குநர் திருப்பதி ஏற்கனவே முத்து நகரம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இது அவருக்கு இரண்டாவது படம்.
ஹீரோ, ஹீரோயின் புதுசா இருந்தாலும் சண்முகராஜன், இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ‘பசங்க’ சிவக்குமார், பிளாக் பாண்டி, தீப்பெட்டி கணேசன், அருள்ஜோதி, ராஜேந்திரன், சரண் செல்வம், சென்ட்ராயன், ரவிக்குமார், பிரசாந்த், பாலாஜி, பிரதீப்னு தெரிஞ்ச முகங்கள் படத்துல உண்டு.
எல்லாரும் ஜெயிக்கணும்கிற நோக்கத்துல தான் இந்தப்படத்துல இணைஞ்சிருக்கோம். கடுமையா உழைச்சிருக்கோம் என்று சொல்லும் திருப்பதி விஜயகாந்த்தின் தீவிர ரசிகராம். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தான் என்னோட சொந்த ஊர். அங்க விஜயகாந்த் ரசிகர் மன்றத்துல நான் இருந்தேன். அவரோட படங்கள் எல்லாமே எனக்குப் பிடிக்கும். குறிப்பா அவர் போடுற சண்டைக்காட்சிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிப்பட்ட என்னோட படத்துக்கு கருணாநிதி ஃபேமிலியில இருந்து ஒரு ஹீரோ கெடைச்சிருக்கிறது ரொம்ப சந்தோஷம் தான் என்றார்.
சரி ‘திருட்டு ரயில்’ன்னா என்ன?
தூத்துக்குடியில் ஒரு பிரச்சனையில மாட்டிக்கிற ஹீரோவும், அவரோட நண்பரும் தப்பிச்சி திருட்டு ரயிலில் ஏர்றாங்க. அங்கேயே ஹீரோயினோட லவ் ஸ்டார்ட் ஆகுது. இறங்கிற ஊர்லேயும் அவங்களுக்கு ஒரு பிரச்சனை வருது. அதை எப்படி எல்லாரும் சமாளிசாங்கங்கிறது தான் கதையாம். இப்படிப்பட்ட கதையில் தமிழக போலீஸார் நடத்தும் போலி என்கவுன்ட்டர் விஷயத்தையும் இணைத்து படத்துக்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் படத்தின் இசையமைப்பாளர் ஜெயப்பிரகாஷைப்பற்றி…
நாகர்கோவிலைச் சேர்ந்த இவர் ஏற்கனவே திருப்பதியின் முதல் படமான ‘முத்து நகரம்’ படத்துக்கு இசையமைத்தவர். அந்தப்படத்துக்குப் பிறகு சின்ன இடைவெளி விழுந்தாலும் மறக்காமல் இரண்டாவது படத்தில் அவரையே மறக்காமல் இசையமைப்பாளராக்கியிருக்கிறார்.
ஹீரோ கருணாநிதியின் சொந்தக்காரர்; டைரக்டர் விஜயகாந்த் ரசிகர் : வாவ்….! வாட்…ட டிஸைன்….!