பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கும் தனுஷின் ‘தொடரி’ !

த்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சென்ற வாரம் ரிலீசான படம் ‘தொடரி’.

ரிலீசான முதல்நாளே ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பைப் பெற்ற இந்தப்படம் ரிலீசான இரண்டே நாட்களில் சுமார் 11 கோடி ரூபாயை வசூலித்ததோடு தொடர்ந்து நான்காவது நாளாக ரிலீசான எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்தில் தனுஷின் காமெடியான, துறுதுறுப்பான நடிப்பு அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்படுகிறது. அதேபோல படத்தின் கிளைமாக்ஸும் வெகுஜன ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப்படுகிறது.

முழுவதுமாக படம் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கக்கூடிய வகையில் எண்டர்டெயினராக இருப்பதால் சென்னை பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மட்டுமில்லாமல், உலகம் முழுவதுமுள்ள தியேட்டர்களில் வசூல் சாதனை செய்து வருகிறது ‘தொடரி’.

DhanushKeerthi SureshPrabhu SalomonThodari
Comments (0)
Add Comment