மீண்டும் நடிக்க வரும் ‘கருவாப்பையா’ கார்த்திகா

‘தூத்துக்குடி’ படத்தில் நாயகியாக நடித்து ”கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.

தொடர்ந்து ‘பிறப்பு’, ‘ராமன் தேடிய சீதை’, ‘தைரியம்’, ‘மதுரை சம்பவம்’, ‘365 காதல் கடிதம்’, ‘வைதேகி’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’ போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.

தங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா சமீபத்தில் வடபழனியில் உள்ள பிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்து கொண்ட சில ரசிகர்கள் ”கருவாப்பையா கார்த்திகா” என்று சூழ்ந்து கொண்டார்களாம். அதைப் பார்த்ததும் உள்ளம் பூரித்துப் போனவர் மீண்டு திரைப்படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.

பிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தும் கூட அதை மறுத்து திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள். நல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.

actress karthikaKarthikaMovie News
Comments (0)
Add Comment