கிளீன் ‘யு’ சான்றிதழ் வாங்கிய விக்ரம் பிரபுவின் ‘துப்பாக்கி முனை’

     

‘60 வயது மாநிறம்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கத் தயாராகியிருக்கும் படம் துப்பாக்கி முனை.

‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக ஹன்சிகா நடித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தணிக்கைக் குழுவில் இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

படத்தில் விக்ரம் பிரபு கம்பீரமான போலீஸ் அதிகாரியாகவும், என்கவுன்டர் ஸ்பெ‌ஷலிஸ்டாகவும் வருகிறார். போலீஸ் அதிகாரியாக வரும் விக்ரம் பிரபு தன் வாழ்க்கையை மாற்றிய வழக்கு குறித்து விசாரிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.

வேல.ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். எல்.வி.முத்துகணேஷ் இசையமைக்க, படம் விரைவில் திரைக்கு வருகிறது.

HanshikaThuppakki MunaiVikram Prabhu
Comments (0)
Add Comment