யோகிபாபுவுடன் ‘ட்ரிப்’ அடிக்கும் சுனைனா!

யோகிபாபு, கருணாகரனுடன் ‘ட்ரிப்’ அடிக்க கிளம்பி விட்டார் சுனைனா.

டார்க் காமெடியோயு சயின்ஸ் பிக்‌ஷன், த்ரில்லர் படமாகத் தயாராகும் இந்த ‘ட்ரிப்’ படத்தில் சுனைனா நாயகியாக நடிக்கிறார்.

‘டார்லிங்’, ‘100’ படங்களை இயக்கிய சாம் ஆண்டனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய டென்னிஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இரண்டு நண்பர்கள் திட்டமிட்ட ஒரு இடத்தை நோக்கி ஒரு பயணத்தை மேற்கொள்கிறார்கள். வழியில் அவர்கள் சந்திக்கும் இடர்கள், அப்பயணத்தை அட்வெஞ்சராக்குகிறது. இடையில் அவர்கள் வேறு ஒரு பயணத்தில் உள்ள 5 பசங்களையும் 4 பெண்களையும் சந்திக்கும் போது எதிர்பாராத பல திருப்பங்கள் ஏற்படுகிறது. அது என்ன என்பதை விவரிப்பதே இப்படத்தின் கதையாம்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ பட இசையமைப்பாளர் சித்து குமார் படத்துக்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவு செய்ய, தீபக் எடிட்டிங் செய்கிறார். ஓணம் பாண்டிகை கொண்டாட்டமாக செப்டம்பர்16ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒரே கட்டமாக தொடர்ந்து 40 நாட்கள் தலக்கோணம், கொடைக்கானல், சென்னைப் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

KarunakaranMovie NewsSunainaTripTrip MovieYogi Babu
Comments (0)
Add Comment