என்றைக்கு நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தாரோ அதே பாணியில் நடிகை திரிஷாவும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
நயனைப் போலவே நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை கமிட் செய்து நடித்து வரும் அவருக்கு வெற்றி மட்டும் நயன் லெவலுக்கு கிடைக்கவில்லை.
அதோடு அவரைத் தேடி வருகிற படங்களும் கேரியருக்கு பெரிய அளவில் கை கொடுப்பதாகவும் தெரியவில்லை.
இதனால் த்ரிஷாவின் மார்க்கெட் சரியத் தொடங்கியிருக்கிறது.
முன்பெல்லாம் அடிக்கடி தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுப்பார் த்ரிஷா. அந்தப் பார்ட்டிக்கு வரும் ஹீரோக்களும் த்ரிஷாவை தங்களது படங்களில் அவருக்கு ரெகமெண்ட் செய்து வந்தார்கள்.
ஆனால் இப்போது த்ரிஷாவின் மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கி விட்டதால் அவர் வைக்கும் பார்ட்டிகளுக்கு பழைய நண்பர்கள் யாரும் வருவதில்லையாம். இதை புரிந்து கொண்ட த்ரிஷாவும் புதிதாக வருபவர்களை இணைத்துக் கொண்டு தனது நட்பு வட்டத்தை மாற்றியிருக்கிறார்.