அப்பாடா… ஒரு வழியா த்ரிஷாவோட பல வருஷக் கனவு நிறைவேறப் போகுது!

சினிமாவில் நடிக்க வந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் மார்க்கெட் டல் அடிக்காமல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா.

விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என அத்தனை ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து விட்டார். அவ்வளவு ஏன் கமல்ஹாசன் ஜோடியாக மன்மதன் அம்பு படத்திலும் சேர்ந்து நடித்து விட்டார்.

இப்படி தமிழில் உள்ள எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து விட்டாலும் நடிகர் ரஜினியுடன் ஒரு படத்திலாவது ஜோடி சேர வேண்டும் என்பது தான் அவருடைய பல ஆண்டு கனவாக இருந்தது.

அவ்வப்போது மீடியாக்களிடம் பேசும் போது கூட ரஜினி சாருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும், அப்படி நடிக்கும் பாக்கியம் கிடைத்து விட்டால் அந்தப் படத்தோடு நான் சினிமாவுக்கு முழுக்கு போடக்கூட தயாராக இருக்கிறேன் என்றார்.

ஆனால் இன்றுவரை ரஜினியுடன் ஜோடி சேரும் சந்தர்ப்பம் அவருக்கு அமையவில்லை.

என்றாவது தனது கனவு நிறைவேறும் என்று காத்துக் கொண்டிருந்த அவருக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதுப்படத்தில் வாய்ப்பு வந்திருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது யார்? என்று இன்னும் முடிவு செய்யவில்லை. இதனால் பட அறிவிப்பு வெளியான அடுத்த நாளே தானே போன் செய்து கார்த்திக் சுப்பராஜிடம் இப்படத்தில் நடிக்க த்ரிஷா வாய்ப்பு கேட்டாராம்.

கார்த்திக் சுப்பராஜ் இன்றுவரை த்ரிஷாவின் கோரிக்கைக்கு ஓ.கேவும் சொல்லவில்லை என்றாலும் ‘நோ’ வும் சொல்லவில்லை . இதனால் கண்டிப்பாக தன்னுடைய பல வருடக் கனவு இந்தப் படத்தில் நிறைவேறும் என்கிற நம்பிக்கையில் கார்த்திக் சுப்பராஜின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

நல்லதே நடக்கட்டும்!

Karthik SubbarajRajinikanthTrisha
Comments (0)
Add Comment