வயது ஏறுது… வாய்ப்பு குறையுது… : வருத்தத்தில் த்ரிஷா!

ண்மையிலேயே த்ரிஷாவை நேரில் பார்க்கும் எல்லோரும் மறக்காமல் கேட்கிற கேள்வி ”அதெப்படி லேசா லேசா படத்துல பார்த்த மாதிரியே இப்பவும் அதே இளமையோட இருக்கீங்க..?” என்பது தான்.

சிம்ரன், ஜோதிகா என அவருடனே நடிக்க வந்த நடிகைகள் எல்லாம் திருமணம் செய்து கொண்டு குடும்வ வாழ்க்கையில் செட்டிலாகி விட தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக இன்றைக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடித்துக் கொண்டிருக்கிறார். த்ரிஷா.

அதற்கு காரணம் அவரின் இளமை தான் என்றாலும் அதுவும் கூட எத்தனை நாளைக்கு ரசிகர்கள் மத்தியில் எடுபடும்?

சில வருடங்களுக்கு முன்பு வரை நடித்தால் சோலோ ஹீரோயின் தான் என்று கண்டிஷன் போட்ட த்ரிஷா சமீபகாலமாக டபுள், ட்ரிபுள் ஹீரோயின்கள் சப்ஜெக்ட் படங்களிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் இப்படிப்பட்ட படங்களில் நடிக்கத் தொடங்கியவருக்கு இப்போதும் அதுவும் இல்லாத நிலைதான் ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.

வயதாகிக் கொண்டே போவதால் த்ரிஷாவை தங்கள் படங்களில் கமிட் செய்ய இயக்குநர்கள் மட்டுமல்ல, அவ்வளவு சம்பளம் கொடுத்து எதற்கு ஒரு பழைய நடிகையை கமிட் செய்ய வேண்டுமென்கிற தயாரிப்பாளர்களின் முடிவும் தான்.

இதனால் வருகிற ஒன்றிரெண்டு படங்களாக இருந்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களாக நடிக்கலாம் என்று நினைத்திருக்கும் த்ரிஷா அப்படிப்பட்ட படங்களுக்கு மட்டும் கால்ஷூட் கொடுக்கிறார்.

கைவசம் ரெண்டே ரெண்டு படங்களை மட்டும் வைத்திருக்கிறார் த்ரிஷா.

வண்டி ஓடுற வரைக்கும் ஓடட்டும் என்பது தான் அவருடைய இப்போதைய திட்டம்.

Trishaத்ரிஷா
Comments (0)
Add Comment