30 வயதைத் தாண்டிய எல்லா நடிகைகளும் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அனுஷ்கா, நயன்தாரா இவர்கள் வரிசையில் த்ரிஷாவும் ‘நாயகி’ ‘மோகினி’ என கதாநாயகியைப் மையப்படுத்தி வரும் பேய்ப்படங்களில் துணிந்து நடித்து வருகிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்தும் இருக்கும் அதே நேரத்தில் 60 அடி உயரம், 100 அடி உயரம் எனக் கட்டித் தொங்க விட்டு சண்டைக் காட்சிகளையும், பேய் பயமுறுத்தும் காட்சிகளையும் இயக்குநர் எடுப்பதால் முன்பை விட ரொம்பவே கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்று புலம்புகிறாராம் த்ரிஷா.
சோலோவுக்கு ஆசைப்பட்டா இதையெல்லாம் சந்திச்சுத்தானே ஆகணும்?