ரஜினி படமாகவே இருந்தாலும் மக்களை ஏமாற்றக் கூடாது : வடிவேலு தடாலடி!

ஜினியின் கேரியரில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முன்னணியில் இருந்த படம் சந்திரமுகி.

இதில் ரஜினி – வடிவேலு கூட்டணியின் காமெடியும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

இதனால் ரஜினியின் அடுத்த படமான லிங்காவிலும் வடிவேலு இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி.

இந்த தகவலை இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாருக்கு செல்லவும் படத்தில் வடிவேலுவை கமிட் செய்ய முயற்சி செய்தார்.

ஆனால் படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுவது போல கேரக்டராக இருந்ததால் லிங்காவில் ரஜினியுடன் நடிக்க மறுத்து விட்டாராம் வடிவேலு.

நான் இருக்கிறேன் என்று ரசிகர்கள் நம்பி அந்தப் படத்துக்கு வருவார்கள். அப்படி வருகிறவர்களுக்கு நான் படம் முழுக்க வந்தால் தான் பிடிக்கும். இல்லையென்றால் அவர்களை ஏமாற்றுவது போல ஆகி விடும்.

அதனால் தான் லிங்கா படத்தில் நடிக்க மறுத்து விட்டேன் என்று கூறியிருக்கிறார் வடிவேலு. அதுமட்டுமல்ல இனி புதிதாக கமிட்டாகிற படம் எதுவாக இருந்தாலும் படம் முழுக்க வருகிற கேரக்டர் என்றால் மட்டுமே அந்தப்படங்களை கமிட் செய்வாராம் வடிவேலு.

சரியான முடிவு!

lingaarajiniRajinikanthvadivelu
Comments (0)
Add Comment