‘அந்தக் கடையை மூடுங்க’… : விஜயகாந்த்தை கலாய்த்த வடிவேலு!

நேற்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினி, கமல், அஜித், விஜய் என திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் பலரும் ஆர்வமுடன் தங்கள் ஓட்டுகளை போட்டு ஜனநாயக கடமையை நிறைவு செய்தார்கள்.

ரஜினி இது வித்தியாசமான தேர்தல் என்று சொல்லி விட்டுப் போக, கமலோ நல்லவர்கள் ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்றார்.

சாலிகிராமத்தில் தனது வாக்கை செலுத்திய ‘வைகைப்புயல்’ வடிவேலுவிடம் நெருங்கிய நிருபர்கள் தேர்தல் குறித்து கருத்து கேட்டனர்.

அப்போது பேசிய வடிவேலு “பரீட்சையில் யார் பாஸ் ஆகிறார்கள் என்பது போல இது ஒரு அருமையான தேர்தல். இந்த நாட்டு யாருக்கு நல்லது செய்வார்கள் என்பதைப் பார்த்து ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும். 100% வாக்கு வருவது தான் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கக்கூடிய மரியாதை.

கள்ள ஓட்டைத் தவிர கண்டிப்பாக அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். புதிதாக வருபவர்கள் யார் மக்களுக்கு நல்லது செய்தாலும் தலை வணங்க வேண்டியது தான். யார் நல்லது செய்வார்கள் என்பது மக்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார்.

அப்போது ஒரு நிருபர் நீங்கள் இந்த தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் பிரச்சாரம் செய்யவில்லை, தேமுதிகவைப் பற்றியோ, அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த்தைப் பற்றியும் எதுவும் பேசவில்லையே? என்று கேட்டார்

அதற்கு பதிலளித்த வடிவேலு ‘அந்தக் கடையை மூடுங்க’… என்று கலாய்த்தார்.

உங்களுக்கு சினிமா வாய்ப்பு குறைந்து விடும் என்பதால் தான் யாரையும் எதிர்த்து பிரச்சாரம் செய்யவில்லையா? என்று இன்னொரு கேள்வியெழுப்பினார் அதே நிருபர், அதற்கும் வடிவேலு “அந்த கடையை மூடுங்க” என்று மட்டும் பதில் சொல்லி விட்டு தனக்கே உரிய வெடிச் சிரிப்புடன் கிளம்பினார்.

பட்டவருக்குத்தானே வலி தெரியும்…!

TN Election 2016vadiveluதமிழ்நாடு தேர்தல் 2016வடிவேலு
Comments (0)
Add Comment