கெத்துக்கு ஒரு அஜித்! – சென்டிமெண்ட்டுக்கு இன்னொரு அஜித்!! : இதுதான் ‘வேதாளம்’ படத்தோட கதையாம்!

மாஸ் ஹீரோக்களின் படங்களின் ரிலீஸ் வேண்டுமானால் தாமதமாகலாம். ஆனால் அந்தப்படத்தின் கதை எப்படியாவது படம் ரிலீசுக்கு முன்பாகவே லீக்காகி விடுகிறது.

அப்படி வெளியாகும் கதைகள் உண்மையா? பொய்யா என்கிற ஆராய்ச்சுக்குள் போகாமல் கதையைப் படித்துப் பார்த்தால் உண்மையிலேயே படத்தின் இயக்குநரை விட அற்புதமாக யோசித்திருக்கிறார்களே என்று சொல்லத் தோன்றும்.

இதோ அஜித்தின் ‘வேதாளம்’ படத்தின் கதை என்று ஒன்று சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

படித்துப் பாருங்கள் ரொம்ப சுவாரஷ்யமாக இருக்கும். ஒருவேளை இதுதான் படத்தின் கதையாக இருக்கும் என்றால் படம் கண்டிப்பாக ஹிட்டு தான் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இதோ ‘வேதாளம்’ படத்தின் கதை!

அஜித் ரொம்ப சாதுவான கார் டிரைவர். தங்கை லட்சுமி மேனன் மீது அதிக பாசம் கொண்டவர். ஏழை மாணவியான லட்சுமிமேனனுக்கு கொல்கத்தாவில் உள்ள சட்டக் கல்லூரியில் ‘ஸ்காலர்ஷிப்’ அடிப்படையில் சீட் கிடைக்கிறது. அதற்காக தங்கையுடன் கொல்கத்தாவுக்குக் குடி பெயர்கிறார் அஜித்.

அங்கு சர்வதேச அளவில் கடத்தல் உட்பட பல குற்றங்களை செய்யும் கபீர்சிங், அந்தப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார். லட்சுமிமேனனின் கல்லூரித் தோழியாக வரும் ஸ்ருதிஹாசன், அஜித்தை காதலிக்கத் தொடங்குகிறார்.

இதற்கிடையே, ஒரு சின்ன மோதலைத் தொடர்ந்து, அஜித் ஓட்டும் கால்டாக்சியில் கபீர்சிங்கின் ஆட்கள் போதை மருந்தை வைக்க, அதை போலீஸிடம் ஒப்படைக்கிறார் அப்பாவி அஜித். இந்த விவகாரம் மீடியா மூலம் பெரிதாகி, போலீஸார் கபீர்சிங்கின் ஆட்களைக் கைது செய்கிறார்கள். இதனால் கபீர்சிங்கின் கவனம் அஜித் மீதும், லட்சுமிமேனன் மீதும் திரும்புகிறது.

தொடரும் தாக்குதல் சம்பங்களில் லட்சுமிமேனன் கொல்லப்பட, அஜித்தால் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், அஜித்தை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வருகிறார்.

மருத்துவமனையில் அஜித்துக்கு விபரீத அனுபவங்கள் ஏற்படுகிறது. அவர் ஒரு ‘ஆவி’ யை சந்திக்கிறார். அதுதான் அஜித் ‘நெம்பர் 2’. அதாவது இன்னொரு அஜித். அவரோ அப்பாவி அஜித்துக்கு நேர்மாறாக, அடாவடி அதிரடி அஜித்தாக இருக்கிறார், ‘கெத்து’ என்ற பட்டப் பெயரோடு!

அவரது நண்பர்கள் சூரி மற்றும் அஸ்வின். ஊரில் பெரும் புள்ளியும் பார்வையற்றவருமான தம்பி ராமையாவைப் பாதுக்காகிறது இந்த அணி. தம்பிராமையாவின் சொத்துக்களை குறிவைக்கும் எதிரிகள், இவர்கள் இருக்கும் வரை அவரை நெருங்க முடியாது என உணர்ந்து, ‘கெத்து’அஜித்தின் நெருக்கமான நண்பரான அஸ்வினை துரோகியாக்கி, அஜித்தை கொடூரமாக வீழ்த்துகிறார்கள்.

ஆவி அஜித்தின் கதையை கேட்டு, முதலில் அவருக்கு உதவ முடிவு எடுக்கிறார் அப்பாவி அஜித். அப்படியே அப்பாவி அஜித்தின் உடலுக்குள் கெத்து அஜித்தின் ஆவி புகுந்து கொள்ள, பரபர பழி வாங்கும் படலம்!

முதலில் லோக்கல் எதிரிகளை முடித்து விட்டு,கொல்காத்தா, தாய்லாந்து என பறக்கிறார்கள் அஜித். அங்கே ‘வேதாள வேட்டை’ என்ன என்பது மீதிக்கதை. அமானுஷ்ய சக்திகள் படைத்த ஆவி, ‘வேதாள’ அஜித் பழி வாங்கினால்… கேட்க வேண்டுமா?

‘கெத்து’ அஜித், ரசிகர் ஸ்பெஷல் என்றால், தங்கை சென்டிமெண்ட், காதல் என்று வாழும் அமைதி அஜித் பொதுமக்களுக்காகவாம்

எல்லா எதிரிகளையும் முடித்த பின், அவ்வளவுதான் ஸ்ருதிஹாசனோடு செட்டில் ஆகிவிடலாம் என அஜித் நினைக்கும்போது மீண்டும் வருகிறது
வேதாளம், வேறு ஒரு அசைன்மெண்டுக்கு!

மீண்டும்…….ஆரம்பம் என்பதோடு படம் முடிவடைகிறதாம்.

AjithkumarLakshmi MenonShruthi HaasanVedalamVedalam Story
Comments (0)
Add Comment