வேதாளம் டீஸரில் ‘வேலையை’ காட்டிய விஜய் ரசிகர்கள்? : அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி

ந்த ரிவேஞ்ச் ஒன்று தான். ஆனால் அது டீஸரிலேயே ஆரம்பமாகும் என்பதைத் தான் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லை.

‘புலி’ படம் ரிலீசானது முதல் நாளே அந்தப் படத்துக்கு எதிராகவும், விஜய்க்கு எதிராகவும் ‘ட்விட்டர்’ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நக்கல், நையாண்டி இன்னபிற கோணங்களில் மீம்ஸ்களை பலரும் வெளியிட்டு படத்தின் வசூலுக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தினர்.

இந்த வேலைகளில் அதிக பங்கு அஜித் ரசிகர்களுடையதாக இருந்தது. குறிப்பாக ட்விட்டரில் அஜித் ரசிகர்களின் ஆதிக்கம் அப்போது கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தொடர்ந்து நான்கைந்து நாட்கள் ‘புலி’ படத்தை குமுற குமுற அடித்து துவைத்தார்கள்.

இதற்கு சரியான பதிலடி கொடுக்க அப்போது விஜய் ரசிகர்களுக்கு எதுவும் கிடைக்காததால் ‘புலி’யின் வசூல் நிலவரங்களைப் போட்டு சமாளித்து வந்தனர்.

மேலும் ‘வேதாளம்’ தீபாவளிக்கு வருகிறதல்லவா? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றும் வெறியோடு காத்திருந்தனர்.

அந்த விருந்து கிடைப்பதற்குள் சோளப்பொறியாக நேற்று நள்ளிரவு ‘வேதாளம்’ டீஸர் வெளியாகும் என்று அஜித் படத்தின் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இது போதாதா வெறியைத் தீர்த்துக் கொள்ள?

எதிர்பார்த்தபடியே யுடியூப் டீஸரில் விஜய் ரசிகர்கள் தங்கள் வேலையை காட்டி விட்டார்களோ? என்கிற சந்தேகம் அஜித் ரசிகர்களிடையே கிளம்பி அந்த சண்டையும் ட்விட்டரில் இன்னொரு பக்கம் சூடாகப் போய்க்கொண்டிருக்கிறது.

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாக விடிவதற்குள் 50,000 லைக்குகளை தாண்டி சாதனை படைத்த ‘வேதாளம்’ டீசர் இப்போது 80,000 லைக்குகளை தாண்டியிருக்கிறது.

அதே சமயத்தில் டீசருக்கான (UNLIKES ) அன் லைக்குகளும் 23,000 த்தை தாண்டியிருக்கிறது.

அஜித்தின் முந்தைய படமான ‘என்னை அறிந்தால்’ படத்தின் அதிகாரப்பூர்வமான டீசருக்கே இன்றைய தேதி வரை வெறும் 9, 198 அன் லைக்குகள் தான் விழுந்திருக்கின்றன.

ஆனால் ‘வேதாளம்’ டீஸரைப் பொருத்தவரை வெளியிட்டப்பட்ட 12 மணி நேரத்துக்குள் 24,366 அன் லைக்குகளைப் பெற்றிருப்பது அஜித் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

‘புலி’ படத்தை கலாய்த்ததற்கு பதிலடியாக இது விஜய் ரசிகர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று அஜித் ரசிகர்களின் பதில் கமெண்ட்டுகளிலிந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

இதனால் மெயின் பிக்சர் வந்தால் விஜய் ரசிகர்களை சமாளிப்பதற்கு என்ன செய்வார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இவங்க சண்டை இந்த ஜென்மத்துல ஓயாது போலிருக்கே..?

Ajith FansAjithkumarPuliVedalam TeaservijayVijay Fans
Comments (0)
Add Comment