‘வேதாளம்’ ரிலீசை கண்டு மிரளும் ஹீரோக்கள்!

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் ‘வேதாளம்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகப் போகிறது.

தமிழ், தெலுங்கில் வரும் இப்படத்துக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்ப்பு எகிறிப்போய் கிடக்கிறது.

ஏற்கனவே இயக்குநர் சிவா ‘வீரம்’ படத்தை கமர்ஷியலாகக் கொடுத்து ஹிட்டாக்கியவர். அதனால் தானோ என்னவோ ‘என்னை அறிந்தால்’ படத்தை விட இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம்.

எந்தளவுக்கு ரசிகர்களும், படத்தை வாங்கியவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அந்தளவுக்கு சக நடிகர்களும் ரிலீசைக் கண்டு மிரண்டு போயிருக்கிறார்கள்.

மிரண்டது தமிழ் நடிகர்கள் இல்லை, தெலுங்கு நடிகர்கள்.

ஆமாம் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா தனது மகன் நாக சைதன்யா நடித்த ‘அகில்’ படமும் தெலுங்கில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.

எங்கே ‘வேதாளம்’ அங்கே வந்தால் தன் மகன் படத்துக்கு எதிர்பார்த்த எண்ணிக்கையில் தியேட்டர்கள் கிடைக்காமல் போய் விடுமோ என்று பயந்து போய் பெரும்பாலான தியேட்டர்களை முன்னதாகவே பிடித்து வைத்து விட்டார்.

இதனால் ‘வேதாளம்’ படம் திட்டமிட்டபடி ஆந்திராவில் வருகிற 10-ம் ஆம் தேதி ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல அன்றே சல்மான்கானின் ‘பிரேம் ராடன் தன் பயோ’ என்ற படமும் ஆந்திராவில் உள்ள முக்கிய தியேட்டர்களை கைப்பற்றியுள்ளது. இதனாலும் வேதாளம் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஆந்திராவில் ‘வேதாளம்’ பட ரிலீஸ் தள்ளிப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

AjithkumarVedalam
Comments (0)
Add Comment