ரஷ்யாவில் விக்ரம்பிரபு – ஷாமிலி டூயட்

விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்  ‘வீரசிவாஜி “ படத்தை  மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

மற்றும் விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் ‘கத்திசண்டை’ படத்தையும் தயாரித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

வீரசிவாஜி படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், கதாநாயகியாக ஷாமிலி நடிக்கிறார்.

மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்

இசை – டி.இமான்

எடிட்டிங் – ரூபன்

வசனம் – ஞானகிரி, சசி பாலா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்

கதை, திரைக்கதை,  இயக்கம் – கணேஷ் விநாயக்

தயாரிப்பு – எஸ்.நந்தகோபால்

வீரசிவாஜி  படத்திற்கு இமான் இசையில் ரோகேஷ் பாடல் வரிகளில் சிம்பு பாடிய “தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு  பப்பாளி தோலு” இந்த பாடலின் படிப்பிடிப்பு ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா மாகாணத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடன அமைப்பில் படமாக்கப்படுகிறது.

ஜூன் 1 ம் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

தவிர  படத்தின் அனைத்து கட்ட வேலைகளும் முடிவடையும் நிலையில் உள்ளது.

விரைவில் இசை வெளீயிட்டு விழா நடைபெற உள்ளதாக பட குழுவினர் தெரிவித்தனர்.

இயக்குனர் மாரிமுத்துகுட்டிசாதன்யாஜான்விஜய்நான்கடவுள் ராஜேந்திரன்மனிஷாஸ்ரீயோகி பாபுரோபோசங்கர்விக்ரம் பிரபுவினோதினிஷாமிலிஸ்ரீரஞ்சனி
Comments (0)
Add Comment