வெந்து தணிந்தது காடு” படத்தின் 50 வது நாள் வெற்றி விழா!

Vels Film International தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் தயாரிப்பில், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், AR ரஹ்மான் இசையில், சிலம்பரசன் TR நடித்து வெளியான “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்களை கடந்தும், ரசிகர்கள் வரவேற்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 50 வது நாள் வெற்றிவிழா திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவினில் படக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவினில் நடிகர் சிலம்பரசன் கூறியதாவது..,

இந்த படத்திற்கு ஒரு சிறப்பாக வெளியீட்டை கொடுத்த உதயநிதி அவர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோசத்தை கொடுத்தது. ஏ ஆர் ரகுமான் சார் உடைய இசைக்கு எனது நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உடன் பணியாற்றுவது எனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றுவது போல் இருக்கிறது. இந்த படம் ரத்தமும் சதையும் கலந்த ராவான படமாக அமைந்தது. அதை வரவேற்ற மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். நன்றி.

#VendhuThanindhathuKaadu

Actor SilambarasanTRActor Udhayanidhi Stalindirector GauthamvasudevmenonVendhu Thanindhathu Kaadu movie