சென்சாரில் ‘A’ சர்ட்டிபிகேட்! : சந்தோஷமாக வாங்கிக் கொண்ட இயக்குநர்

ம்ம நாட்டோட கலாச்சாரத்துக்கு கொஞ்சமும் ஒவ்வாதது தான் சார் இந்த பாலியல் தொழிலை சட்டப்பூர்வமா அங்கீகரிக்கிறது. அதற்கு மட்டும் எந்த காலகட்டத்திலும் அரசாங்கம் அனுமதி கொடுத்து விடக்கூடாது என்கிறார் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ படத்தின் இயக்குநர் முத்துக்குமார்.

இன்று ரிலீசாகியிருக்கும் இந்தப்படத்தில் செக்ஸ் ஒர்க்கர்ஸின் வேதனைகளை இம்மி பிசகாமல் சொல்லியிருக்கிறாராம்.

அந்த ஊர்ல ஒரு பெரியபுள்ளி எம்.பி ஆகிறதுக்காக பெண்களை பெரிய பெரிய அரசியல்வாதிகள், அதிகாரிகள், அதிகாரமிக்கவர்களுக்கு கரெக்ட் பண்ணிக்கொடுக்கிற வேலையைச் செய்கிறான். அவன் கையில் ஊர்ல சின்ன வயசுல இருந்தே அவன் பார்வையில் பட்டுக் கொண்டிருக்கும் படத்தின் நாயகி வெண்ணிலாவும் சிக்குகிறாள்.

அதன் பிறகு அவள் படுகிற உடல ரீதியான வேதனைகளைத்தான் படத்துல காண்பிச்சு செக்ஸ் தொழிலுக்கு இந்தியாவுல அரசாங்கம் அனுமதி கொடுக்கக் கூடாது?என்பதற்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறோம். என்றவர் இதற்காக மும்பை, கொல்கத்தா நகரங்களுக்கு சென்று அங்குள்ள பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்களை நேரில் சந்தித்து அவர்களுடைய அனுபவங்களை கேட்டறிந்து அதனடிப்படையில் படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறாராம். என்கிறார்.

இங்கே பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் காலை 7 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவு 12 மணி வரை அந்த தொழிலில் ஈடுபடுகிறாள். ஆக அதைத்தாண்டி அவளை சிந்திக்கத் தூண்டுகிற விஷயங்களோ, நேரமோ அவளுக்கு கொடுக்கப்படுவதில்லை.

இதனால் அவளுக்குள் ஏற்படுகிற மன உளைச்சல்கள் ஏராளம். இந்த இரண்டு மாநகரங்களிலும் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக அனுமதி கொடுத்ததால் வந்த விளைவு தான் இது! என்பவரிடம் பல வெளிநாடுகளில் இதற்கு முறையான அனுமதி கொடுத்து முறைப்படுத்தப்பட்டுக்கிறதே அதேபோல இந்தியாவில் சாத்தியமில்லையா என்றால்..? சிரிக்கிறார்.

இந்தியாவில் அந்த முறைப்படுத்தலுக்கு சாத்தியமே இல்லை சார். கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறோம்னு அரசாங்கமே டாஸ்மாக்கை நடத்தி மக்களை குடிக்க வைக்குது. இன்னைக்கு கள்ளச்சாராயத்தில் சாவுற மனிதர்களை விட டாஸ்மாக் சாராயத்தை குடிச்சு சாவுறவங்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. அப்படி ஒரு நெலைமை தான் பாலியல் தொழிலை இந்தியாவுல அனுமதிச்சா ஏற்படக்கூடிய விளைவுகளும் மோசமா இருக்கும். அதனால தான் இந்தியாவுல பாலியல் தொழிலை சட்டப்பூர்வமா அங்கீகரிக்கக் கூடாது என்கிறோம் என்றார்.

இப்படி ஒரு சமாச்சாரம் உள்ள படத்துக்கு சென்சாரில் சர்ட்டிபிகேட் கிடைப்பதில் தடங்கல் இல்லாமல் இருக்குமா? அதையும் சந்தித்ததாம் படக்குழு.

படத்துல பிரேமானந்தாங்கிற பேர்ல ஒரு சாமியார் இளம் பெண்ணோட நெருக்கமா இருக்கிற மாதிரி காட்சிகள் இருக்கு. அதையெல்லாம் தூக்கணும்னு சொன்னாங்க. எதுக்கு கேட்டப்போ நித்யானந்தா சுவாமியை குறிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்குன்னு சொன்னாங்க. அவரே அது சம்பந்தமான நிஜ வீடியோவில் இருப்பது நான் தான்னு  ஒப்புக்கவில்லை. அப்படி இருக்கும் போது  நீங்க ஏன் இந்தக் காட்சி அவரை குறிக்குதுன்னு சொல்றீங்க?ன்னு கேட்டப்போ சரியான பதில் இல்லை, சர்ட்டிபிகேட்டும் கொடுக்கல.

அதன்பிறகு ரீ-சென்சாருக்குப் போய் கட்டே இல்லாமல் ஏ சர்ட்டிபிகேட் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். எடுத்த படத்துக்கு ஏ சர்ட்டிபிகேட் என்றாலே அலறும் இயக்குநர்களுக்கு மத்தியில் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டு இன்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.

ஏன் தெரியுமா? இதில் ஷகிலாவும் நடித்திருக்கிறாராம். அப்ப சரி…!

Dhinesh KumarSamasthiVennilavin Arangetramசமஸ்திதினேஷ் குமார்வெண்ணிலாவின் அரங்கேற்றம்
Comments (0)
Add Comment