அட இங்கப்பார்றா… தஞ்சாவூர் பேக் ட்ராப் கதையில ஹீரோ சசிகுமார்!

ப்படி மதுரையையும், மல்லியையும் பிரிக்க முடியாதோ? அப்படித்தான் மதுரை பின்னணி படங்களையும் சசிக்குமாரையும் பிரிக்க முடியாமல் இருந்தது.

ஆனால் இப்போது அவரே அந்த பேக் ட்ராப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தஞ்சாவூர் பக்கம் போயிருக்கிறார்.

அட ஆமாங்க, மதுரைக்கார பாசக்காரர் இயக்குநர் சசிகுமார் தனது வழக்கமான மதுரை பின்னணி கதைக்கு குட்பை சொல்லி விட்டு முதல்முறையாக தஞ்சாவூர் மண்ணின் பின்னணியில் வர இருக்கும் ‘வெற்றிவேல்’ படத்தில் ஹீரோவாகியிருக்கிறார்.

‘தாரை தப்பட்டை’ படத்தின் தோல்விக்குப் பிறகு சசியில் ரெகுலர் சினிமா என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது.

ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர். ரவிந்திரன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் டி.பி. கஜேந்திரனிடம் துணை இயக்குநராகவும், ஜில்லா படத்தில் இயக்குநர் நேசனிடம் இணை இயக்குநராகவும் பணிபுரிந்த வசந்தமணி இயக்குகிறார்.

படத்தில் மியா ஜார்ஜ், நிகிலா மற்றும் வர்ஷா என சசிக்கு மூன்று ஜோடிகள். முக்கிய வேடத்தில் பிரபு, தம்பி ராமையா மற்றும் இளவரசு ஆகியோரும் நடிக்கிறார்கள்.

அதெப்படி மதுரையை விட்டே வராமல் இருந்த சசிகுமாரை தஞ்சாவூர் பக்கம் கூட்டிப்போனீர்கள் என்றோம் இயக்குநர் வசந்தமணியிடம்…

”இந்தப் படத்தோட கதையை நான் யோசிக்கும் போதே இதில் சசிக்குமார் நடித்தான் தான் பொருத்தமா இருக்கும்னு நெனைச்சு எழுதினேன். முதல்ல கதையை என்னோட தயாரிப்பாளர்கிட்ட சொன்னப்போ அவர் இந்தக் கதையை சசிக்குமார் சார்கிட்ட சொல்லியிருக்காங்க. கேட்ட உடனே எனக்கு போனைப் போட்டு வரச்சொன்னார் சசி சார்.

முழுக்கதையையும் கேட்டதுக்கப்புறம் சின்னச் சின்னதா மூணு கரெக்‌ஷன்ஸ் சொன்னார். அவர் சொன்னால் சரியாத்தான் இருக்கும்னு நெனைச்சேன். படத்தை எடுத்து முடிச்சு போட்டுப் பார்த்தப்போ அவர் சொன்ன கரெக்‌ஷன் ரொம்ப சரியானதா இருந்துச்சு.

என்றவர் கதையைப் பற்றிப் பேசினார்…

தம்பியோட காதலுக்காக போராடுகிற அண்ணன் தான் சசிக்குமார் சார். அதோட ஃபேமிலி, காமெடி ஆக்‌ஷன், செண்டிமெண்ட்டுன்னு எல்லா விஷயங்களையும் வெச்சு இந்தப்படத்தை ஜனரஞ்சகமா எடுத்திருக்கேன்.

நான் தஞ்சாவூர் பக்கம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவன். எல்லா ஊருக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கும். அப்படித்தான் நான் வளர்ந்து பார்த்த ஊர்ல உள்ள அடையாளங்களும் இந்தப் படத்துல இருக்கும்” என்றார்.

தஞ்சாவுர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இம்மாதம் ரிலீசுக்கு தயாராகி நிற்கிறான் இந்த ‘வெற்றிவேல்.’

Miya GeorgesasikumarVetrivelசசிகுமார்மியா ஜார்ஜ்வெற்றிவேல்
Comments (0)
Add Comment