மிகப்பெரிய எதிர்பார்ப்பிலுள்ள படம். பா. இரஞ்சித் இயக்கத்தில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம், பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘World of Vettuvam’ வீடியோ ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியான இந்த வீடியோவிற்கு, இந்தியில் பங்கஜ் திரிபாதி, தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் சௌபின் ஷாஹிர், கன்னடத்தில் கிச்சா சுதீப், தமிழில் இயக்குநர் பா. இரஞ்சித் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
ஆர்யா, தினேஷ், ஷபீர், ஷோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள பான் இந்தியத் திரைப்படமான ‘வேட்டுவம்’, பொங்கல் 2027 பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரம்மாண்டமான கதைக்களம், தீவிரமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் தனித்துவமான உலகப் பின்னணியுடன் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகி வருகிறது ‘வேட்டுவம்’.