இந்தியாவின் மிகப்பெரிய ஹோம் க்ரோன் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லி தளமான ZEE5, சமூக-அரசியல் கதைக்கள டிராமாவான ‘விடுதலை – பகுதி 1’ இன் உலகளவிலான டிஜிட்டல் வெளியீட்டை இன்று அறிவித்தது -. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ள இந்தத் திரைப்படம் இப்போது டைரக்டர்ஸ் கட் உடன் தமிழில் இப்போது ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது..
குமரேசன் (சூரி) இந்த உலகைப் பற்றி கொள்கை சார்ந்த ஒரு இலட்சிய பார்வையை கொண்டுள்ளார். மற்றும் காவல்துறையில் புதிதாக சேரும் எந்த ஒரு நபரையும் போலவே சிறு சிறு சில்லறை வேலைகளை செய்து தனது தொழில் வாழ்க்கையை தொடங்குகிறார், நீதியின் கீழான தீயதையும், நல்லதையும் குமரேசன் எப்படி அணுகுகிறார் என்பதையும் உள்ளூரைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணான தமிழரசி (பவானி ஸ்ரீ) உடனான அவரது உணர்வு பூர்வமான தொடர்பு எவ்வாறு பெருமாள் (விஜய் சேதுபதி) சிறைப்படாமல் தப்பிக்க உதவுகிறது என்பதையும் இதன் கதைக்களம் ஆராய்கிறது.
விடுதலை திரைப்படம், காவல்துறை நடத்தும் அட்டூழியங்களுக்கு பின்னால் உள்ள நெறிமுறைகளை மனதை நெருடும் வகையில் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக கேள்விக்குள்ளாக்குகிறது.. காவல்துறையின் அட்டூழியத்தின் மீது கவனத்தை ஈர்ப்பதோடு, 1990 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்தும் கதை விவாதிக்கிறது. அர்ப்பணிப்போடு கூடிய, பணிவான ஒரு அரசு ஊழியராக இருந்த குமாரேசன் அமைப்பை எதிர்த்து கேள்வி எழுப்புவராக உருவெடுத்து தனது அப்பாவித்தனத்தை இழக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழ்நிலைகள் மீது விடுதலை பகுதி 1, திரைப்படம் கவனம் செலுத்துகிறது, விசாரணை என்ற பெயரில் காவல்துறை நடத்தும் அனைத்து அட்டூழியங்களையும் – நம்மில் பலரைப் போலவே – கண்டும் காணாத ஒரு மௌன சாட்சியாக அவர் மாறுகிறார். சூரி தனது கதாபாத்திரத்தின் அப்பாவித்தனத்தையும் நிராதரவான தன்மையையும் திறம்பட வெளிப்படுத்துகிறார்.