ஆஹா… இதுவல்லவோ காதல்! : நயன்தாராவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரவுடி தான்’ படத்தை இயக்கிய போது அப்படத்தில் நாயகியாக நடித்த நயன்தாரா மீது காதலில் விழுந்தார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவனின் காதலை ஏற்றுக் கொண்ட நயனும் பதிலுக்கு வழிய வழியை அன்பைப் பொழிந்தார்.

காதலித்த சில மாதங்களிலேயே புட்டுக் கொள்ளும் காதல் போல இல்லாமல், இந்தக் காதல் ஒரு வருடத்தைத் தாண்டியும் நிலைத்து நின்றதால் சந்தோஷப்பட்ட நயன்தாரா சமீபகாலமாக திரையுலக விழாக்கள் எல்லாவற்றிலும் விக்னேஷ் சிவனுடன் ஒன்றாக இணைந்து காட்சி தர ஆரம்பித்திருக்கிறார்.

இருவருமே வெளிப்படையாக தங்களது காதலை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் ஊர் உலகம் அவர்களை ‘காதலர்கள்’ என்று தான் நம்பிக்கொண்டிருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் தான் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ரிலீஸ் வேலைகள் தலைக்கு மேல் இருந்தும் காதலி நயனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது பிறந்தநாளை அவருடன் சேர்ந்து தனியாகக் கொண்டாட நியூயார்க் சென்றிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

அங்கிருந்து இருவரும் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கமாக தனது காதலரின் பிறந்த நாள் என்றால் அதை வெளிநாட்டில் கொண்டாட நயன்தாரா தான் முன்கூட்டியே திட்டமிடுவார். அதற்காக சில  லட்சங்களை அள்ளியும் விடுவார். ஆனால் இந்த முறை விக்னேஷ் சிவன் முன் கூட்டியே திட்டமிட்டு நயனை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருப்பது உண்மையிலேயே நயனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

NayantharaVignesh Shivan
Comments (0)
Add Comment