எல்லாத்தையும் விஜய் சேதுபதி பார்த்துக்குவாராம்! : விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகினார் சிவகார்த்திகேயன்

ரு ஹிட் கொடுத்த ஹீரோவும், இயக்குநரும் அடுத்ததாக ஒரு புதுப்படத்தில் இணைவது சினிமாவில் ஒன்றும் புதிதில்லை.

ஆனால் ”நானும் ரவுடி தான்” ஹிட்டுக்குப் பிறகு விஜய் சேதுபதியை விட்டு விட்டு சிவகார்த்திகேயனை இயக்க திட்டமிட்டு வந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

இதற்காக இருவரும் நேரில் சந்தித்து கதை உள்ளிட்ட விஷயங்களையும் பேசியிருக்கிறார்கள்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு குட்பை சொல்லி விட்டு மீண்டும் விஜய் சேதுபதியுடன் ஒரு புதுப்படத்தில் இணைய முடிவெடுத்து விட்டு அதற்கான வேலைகளில் மூழ்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இதற்கு காரணமே சிவகார்த்திகேயனின் பிஸியான செட்யூல் தானாம்.

கைவசம் சொந்தப்படமான ”ரெமோ” உட்பட கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் இந்த மூன்று படங்களை முடித்த பிறகு தான் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்வது என்று நினைத்திருக்கிறாராம்.

இதனால் விக்னேஷ் சிவன் படம் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து சிவகார்த்திகேயனுக்காக காத்திருக்க விரும்பாத விக்னேஷ் சிவன் மீண்டும் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி கால்ஷீட் வாங்கி படத்துக்கு ”காத்து வாக்குல ரெண்டு காதல்” என்று டைட்டிலும் வைத்து விட்டார்.

எத்தனை படங்களாக இருந்தாலும் நேக்காக கால்ஷூட்டை பிரித்து கொடுத்து நடிப்பதால் விஜய் சேதுபதி வசம் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்கள் இருக்கின்றன.

பொழைக்கத் தெரிஞ்ச மனுஷன்…!!!

Siva KarthikeyanVignesh ShivanVijay Sethupathiசிவகார்த்திகேயன்விக்னேஷ் சிவன்விஜய் சேதுபதி
Comments (0)
Add Comment