‘தெறி’ படப்பிடிப்பை முடித்துக் கொடுத்து விட்டார் விஜய்.
வரும் மே மாதம் வரை படப்பிடிப்புகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு தனது குடும்பத்தோடு ஓய்வெடுப்பார். ஓய்வு முடிந்ததும் ஜூனில் பரதன் இயக்கத்தில் 60-வது படத்தில் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகி வந்த நிலையில்
விஜய் நடிக்கும் 60 வது படத்தின் தொடக்கவிழா அப்படத்தை தயாரிக்கும் விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் நேற்று மிகவும் எளிமையாக நடந்தது.
விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை. படத்தில் இயக்குநர் பரதன், தயாரிப்பாளர் பாரதி, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘ஜில்லா’ படத்துக்குப் பிறகு இப்படத்தில் காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்கிறார்.
படத்தொடக்கவிழா நடைபெற்றாலும் முழுப் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது பற்றிய எந்த விபரமும் வெளியாகவில்லை.