விஜய் முருகதாஸ் படத்தின் பூஜை எப்போது?


இயக்குநர் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி தான் விஜய்யின் சர்வதேச மார்க்கெட்டுக்கு ஒரு பெரிய துவக்கம். அந்தப்படம் 100 கோடி க்ளப்பில் இணைந்து சாதனை படைத்தது. அதற்கடுத்து விஜய் முருகதாஸ் கூட்டணியில் வந்த கத்தி, சர்கார் ஆகிய படங்களும் வசூல் வேட்டையாடின.

தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்க முருகதாஸ் விஜய் கூட்டணி மீண்டும் இணைகிறது. இப்படத்திற்காக விஜய் முருகதாஸ் இருவருக்கும் பெரிய சம்பளம் பேசப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் பூஜை எளிமையாக விரைவில் இருக்கும் என்ற தகவல் வந்தது. ஆனால் கரன்ட் தகவல் என்னவென்றால் இப்படத்தின் பூஜையை டிசம்பர் மாதம் போட இருக்கிறார்கள். படம் 2021 தீபாவளி ரிலீஸாம்

Actor VijayAR Murugadosssunpictures
Comments (0)
Add Comment