ரசிகர்கள் மனதில் முதலிடம் பிடித்த விஜய்! : அப்போ அஜித்?

காலாகாலத்துக்கும் இந்த ‘நம்பர் 1’ இடத்தில் யார் என்கிற பஞ்சாயத்து கோலிவுட்டில் ஓயவே ஓயாது போலிருக்கிறது.

தமிழ்சினிமாவில் நேற்று அறிமுகமான ஹீரோக்கள் கூட இந்த இடத்துக்கு வர ஆசைப்பட ஆரம்பித்து விட்டார்கள்.

ஆனால் பல ஆண்டுகளாக அந்த இடம் எங்க ‘தளபதி’க்குத்தான் என்று விஜய் ரசிகர்களும், எங்க ‘தல’க்குத்தான் என்று அஜித் ரசிகர்களும் சண்டை போட்டுக்கொண்டிருப்பது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இது தெரிந்தெ சமீபத்தில் வட இந்திய ஊடகம் ஒன்று எந்த நடிகர் தமிழ்சினிமாவில் மாஸ்? என்கிற கருத்துக் கணிப்பை நடத்தி பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

இதில் சுமார் 34 சதவீத வாக்குகளைப் பெற்று விஜய் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். அடுத்து 31 சதவீத வாக்குகளுடன் அஜித் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

சென்ற ஆண்டு அஜித்தின் ‘வேதாளம்’ படம் வசூலில் முதலிடத்தில் இருந்தது. விஜய்யின் ‘புலி’ ஐந்தாவது இடத்தில் இருந்தது.

அப்படியிருந்தும் ரசிகர்களை அடிக்கடி சந்தித்து அவர்களுன் எப்போதும் நேரடித் தொடர்பில் இருப்பதாலேயே விஜய்க்கு இந்த முதலிடம் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

உண்மையும் அதுதானே..?

ajithAjith FansAjithkumarvijayVijay Fans
Comments (0)
Add Comment