விஜய்யிடமிருந்து அழைப்பு : ரேஸில் முந்துகிறார் ‘தனி ஒருவன்’ இயக்குநர்!

‘தனி ஒருவன்’ மெகா ஹிட்டுக்குப் பிறகு அந்தப் படத்தை ஹிந்தியில் இயக்க திட்டமிட்டார் இயக்குநர் மோகன் ராஜா.

படத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சல்மான்கான் அதை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிக்க திட்டமிட்டார். ஆனால் அவர் கால்ஷுட் இப்போதைக்கு இல்லாததால் அதை கிடப்பில் போட்டார்.

இதற்கிடையே தெலுங்கில் ‘தனி ஒருவன்’ படத்தின் பிசினஸ் பேச்சுவார்த்தையில் இருந்த இயக்குநர் மோகன் ராஜாவுக்கு விஜய்யிடமிருந்து திடீர் அழைப்பு வந்ததாம்.

‘தனி ஒருவன்’ மாதிரி ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்கஜி… மறுபடியும் சேர்ந்து ஒரு படம் பண்ணலாம் என்றாராம் விஜய்.

ஏற்கனவே ‘வேலாயுதம்’ படத்தில் விஜய்யுடன் இணைந்து ஹிட் கொடுத்தவர் தான் இயக்குநர் மோகன் ராஜா.

இப்போது மீண்டும் விஜய்யே போன் போட்டு அழைத்திருப்பதால் ஹிந்திப் படத்தை இயக்க தாமதமாகும் கேப்பில் விஜய் படத்தை இயக்கத் தயாராகி விட்டார்.

இது விஜய்க்கு 60-வது படம். ஏற்கனவே இந்த 60-வது படத்தை எஸ்.ஜே.சூர்யா, சசிக்குமார் ஆகிய இயக்குநர்கள் விஜய் ஹிட் லிஸ்ட்டில் இருந்தார்கள். இப்போது மோகன் ராஜா அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 2016 புத்தாண்டில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Mohan Rajavijay
Comments (0)
Add Comment